மேலானவைகளை நாடுங்கள்

மேலானவைகளை நாடுங்கள்
தேவாதி தேவனின் பிள்ளைகள் நீங்கள்

1. உள்ளத்திலும் எண்ணத்திலம் தீமையை வெறுத்திடுங்கள்
பளுவான பாவப் பாரங்கள் யாவும் பதர் என்றே தள்ளிடுங்கள்
அநித்தியமான அற்பசுகங்கள் அருவருத்திடுங்கள்
விசுவாசப் பயணம் இயேசுவைக் கொண்டு ஓடியே முடித்திடுங்கள் – மேலானவைகளை நாடுங்கள்

2. பூமியிலே அந்நியர் என்று அறிக்கை செய்திடுங்கள்
இனிமேல்வரும் பலன்மேல் மனம் ஊன்றியே வாழ்ந்திடுங்கள்
இயேசுவின் சொல்லுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள்
முதல் அன்பிலே குறையாமலே இயேசுவைப் பின்பற்றுங்கள் – மேலானவைகளை நாடுங்கள்

3. யுத்தத்திலே வல்லவராய் சத்தியப்போர் புரிந்தே
எதிராளியின் திரள்சேனைகளை இயேசுவில் முறியடித்தே
இயேசுவுக்காகப் பாடுகள் ஏற்க கொஞ்சமும் அஞ்சாமலே
மெய்யான உயிர்த்தெழுதலையே எண்ணியே சுகித்திருங்கள் – மேலானவைகளை நாடுங்கள்



melanavaikalai nadungkal

melanavaikalai nadungkal
thevathi thevanin pillaikal neengkal

1.
ullaththilum ennaththilam dhamaiyai veruththidungkal
paluvana bavab barangkal yavum padhar enre dhallidungkal
a niththiyamana arpasukangkal aruvaruththidungkal
visuvachab payanam iyesuvaik keாndu oodiye mudiththidungkal – melanavaikalai nadungkal

2.
bumiyile anth niyar enru arikkai seythidungkal
inimelvarum palanmel manam uunriye vaznththidungkal
iyesuvin seாllukku ellavarrilum kazbpadinththirungkal
mudhal anbile kuraiyamale iyesuvaib binparrungkal – melanavaikalai nadungkal

3.
yuthdhaththile vallavaray chaththiyabbeாr burinththe
ethiraliyin thiralsenaikalai iyesuvil muriyadiththe
iyesuvukkakab badukal eerka keாnjchamum anjsamale
meyyana uyirththezudhalaiye enniye sukiththirungkal – melanavaikalai nadungkal